வங்கதேசத்திலிருந்து, சட்டவிரோதமாக ஊடுருவும் நபர்களை தடுக்க, மேற்குவங்க அரசு தவறிவிட்டதாக, மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது.
மாநிலங்களவையில் பேசிய மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் இதனைத் தெரிவித்துள்ளார். 2016 முதல் 2019 வரை, நான்கு ஆண்டுகளில் மட்டும், எல்லைப் பாதுகாப்புப் படையினரால், வங்கதேசத்திலிருந்து, இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 4500 பேரை கைது செய்து, மேற்குவங்க காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
ஆனால், அந்த வங்கதேச ஊடுருவல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க மேற்குவங்க அரசு தவறிவிட்டதாகவும், உள்துறை இணையமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.