செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

வாரத்தில் 4 நாட்களில் 48 மணி நேரம் வேலை ... மீதி 3 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை?

Feb 10, 2021 04:20:11 PM

வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை,  3 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை  என்ற புதிய நடைமுறையை விரைவில்  மத்திய அரசு செயல்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என நடுவண அரசு அறிவித்தது. குறிப்பாக, நாள் ஒன்றுக்கான வேலை நேரம் 8 மணியிலிருந்து  12 மணி நேரமாக உயர்த்தப்படும் என்று கூறப்பட்டது. இந்த அறிவிப்பு தொழிற்சங்கங்களிடையே கடும் எதிர்ப்பை கிளப்பிய நிலையில், தொழில் நிறுவனங்கள் கூடுதல் வேலை நேரத்தால் மகிழ்ச்சி அடைந்தன. 

தொழிற்சங்கங்களிடையே இருந்து எதிர்மறையான விமர்சனங்கள் கிளம்பியதையடுத்து, திட்டத்தை  மத்திய அரசு சற்று ஆறப்போட்டது. இந்த நிலையில், தற்போது மீண்டும் அதுதொடர்பான பேச்சுக்கள் எழுந்துள்ளன.

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலாளர் அபூர்வ சந்திரா, ”தற்போது ஒரு நாளுக்கு 8 மணி நேர வீதம் 6 நாட்களுக்கு 48 மணி நேரமாக, தொழில் நிறுவனங்களில் வேலை நேரம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. ஒரு நாளைக்கு வேலை நேரம் என்பது 12 மணி நேரமாக கூட்டப்பட்டாலும், ஒரு வாரத்தில் 48 மணி நேரம் மட்டுமே தொழிலாளர்களிடம் வேலை வாங்க வேண்டும் என்ற விதியில் மாற்றமில்லை.

எனவே, ஒருவேளை ஒரு நாளில் 12 மணி நேரம் வேலை வாங்கினால், 4 நாட்கள் மட்டுமே தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும். மீதமிருக்கும் 3 நாட்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.

இதுப்பற்றி ஒவ்வொரு தொழிலாளியிடமும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கலந்துபேசி அவர்களின் ஒப்புதலுடன் மட்டுமே 12 மணி நேரம் வழங்க வேண்டும். ஏனெனில் ,அனைவராலும் 12 மணி நேரம் வேலை செய்ய இயலாது.

இதுதொடர்பான விதிகள் மற்றும் நெறிமுறைகளை வகுக்கும் இறுதிக்கட்டப் பணிகளை தொழிலாளர் நல அமைச்சகம் மேற்கொண்டுவருகிறது.

இதேபோல அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனைக் கருத்தில்கொண்டு அவர்களுக்கான வலைதளம் மே அல்லது ஜூனில் வெளியிடப்படும். அதில்,  தொழிலாளர்கள் தங்களின் தரவுகளைப் பதிய வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்களுடைய முழு விவரங்களைத் தெரிந்துகொள்வதே மத்திய அரசின் நோக்கம். இதில் பதிந்துகொண்டால் விபத்துக்கள் ஏற்பட்டால் இலவசமாக காப்பீடு வழங்க வழிவகை செய்யப்படும்” என்றார். மேலும், தொழிலாளர்களின் நிலையை கருத்தில் கொண்டே எந்தவொரு முடிவையும்  மத்திய அரசு எடுக்கும் எனவும் உறுதியளித்தார்.

 


Advertisement
தீபாவளி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த முவுர் கொலை..
காரைக்கால் அரசு அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த திருநங்கை .!
புதுச்சேரி விடுதலைதினத்தையொடி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார் முதலமைச்சர் ரங்கசாமி
நாடு முழுவதும் ஒளிவீசும் மின்விளக்குகளால் சிறப்படைந்த தீபாவளி பண்டிகை
வெடித்துச் சிதறிய வெங்காய வெடிகள் துண்டு துண்டான இளைஞரின் உடல்
அயோத்தியில் 25 லட்சம் அகல்விளக்குகளை ஏற்றி புதிய கின்னஸ் சாதனை படைத்த தீப உற்சவ விழா
நாடு முழுவதும் இன்று தீபாவளிப் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாட்டம்
தேசிய ஒற்றுமை தினத்தையொட்டி சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலைக்கு பிரதமர் மோடி இன்று மலர் தூவி மரியாதை
வடமாநிலப் பகுதிகளில் வேளாண் கழிவுகள் எரிக்கப்படுவதால் காற்று மாசு - புகைமூட்டம்
கேரளா, கோவில் திருவிழாவில் பயங்கர வெடி விபத்து.. 154க்கும் மேற்பட்டோர் காயம்

Advertisement
Posted Nov 01, 2024 in சென்னை,Big Stories,

சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டியதால் வெடித்த ஏர் பேக்.. பலியான மாணவன்.. ஓவர் ஸ்பீடால் பறிபோன உயிர்

Posted Nov 01, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

வெடித்துச் சிதறிய வெங்காய வெடிகள் துண்டு துண்டான இளைஞரின் உடல்

Posted Oct 31, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

உண்மையிலேயே தில்லு தாம்பா.. நீட்டில் எடுத்தது 129.. கொடுத்தது 698 போலி ஆவணத்தால் சிக்கிய மாணவர்..! “மருத்துவர் ஆக வேறு வழி தெரியல சார்..”

Posted Oct 30, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

த.வெ.க மாநாட்டிற்கு வந்து மாயமாகி தவித்த மாணவர் .. மீட்டு வீட்டுக்கு அனுப்பிய விவசாயி ..! ஆரத்தி எடுத்து தாய் ஆனந்த கண்ணீர்

Posted Oct 30, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

15 வயது சிறுமி கொலை..டிராவல் பேக்கில் சடலம் ராஜஸ்தான் தம்பதி கைது..! போலீசில் சிக்கியது எப்படி ?


Advertisement