சுமார் 5 மாதங்களாக சீன கடலில் சிக்கித் தவிக்கும் இந்திய மாலுமிகள் 16 பேர் வரும் 14 ஆம் தேதி தாயகம் திரும்புவார்கள் என கப்பல்துறை அமைச்சர் மன்சுக் மாண்டாவியா தெரிவித்துள்ளார்.
வணிக கப்பலான எம்வி அனஸ்டாசியா என்ற கப்பலில் சென்ற இவர்கள் செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் சிக்கியுள்ளனர். கொரோனா காரணமாக இந்த கப்பலை துறைமுகத்திற்குள் அனுமதிக்க சீனா மறுத்து விட்டது. எனவே கேவோபெடியன் என்ற துறைமுகத்திற்கு அருகே இந்த கப்பல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.
பெய்ஜிங் இந்திய தூதரக அதிகாரிகள் எடுத்த முயற்சியின் காரணமாக கப்பல் ஊழியர்களை மாற்றும் நடவடிக்கைகள் வெற்றி பெற்று அவர்கள் நாடு திரும்புகின்றனர். இதே போன்று சிக்கிய மற்றோர் கப்பலான எம்வி ஜாக் ஆனந்தில் இருந்த 23 மாலுமிகள் கடந்த மாதம் இந்தியா திரும்பினர்.