நவி மும்பையின் வாஷி பகுதியில் உள்ள வெங்காய மொத்த கொள்முதல் மண்டிகளில் வெங்காயம் வரத்து 40 சதவீதம் குறைந்துள்ளது.
வெங்காயம் உற்பத்தி குறைந்திருப்பதால் மொத்தக் கொள்முதல் சந்தை மற்றும் சில்லரை வர்த்தகத்தில் அதன் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
கடந்தவாரத்தில் மொத்த சந்தையில் கிலோ 25 ரூபாய்க்குள் விற்கப்பட்ட நிலையில் இப்போது அது 45 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதனால் சில்லரை வர்த்தகத்திலும் வெங்காயத்தின் விலை 50 ரூபாய்க்கு மேலாக உயர்ந்து வருகிறது.
நவம்பர் மாதத்தில் புனே, நாசிக் போன்ற மகாராஷ்ட்ர வெங்காய வயல்களில் பயிரிட்ட வெங்காய பயிர்கள் எதிர்பாராத கனமழையால் சேதம் அடைந்துவிட்டதாக விவசாயிகளும் வியாபாரிகளும் கூறுகின்றனர்.