வங்கிகளில் கடன் பெற்று, வேண்டும் என்றே திருப்பிச் செலுத்தாமல் ஏய்த்தவர்களின் பட்டியலில், முதல் 100 நிறுவனங்களின் கடன் தொகை மட்டும் 84 ஆயிரத்து 632 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு, 2020 ஆம் ஆண்டு மார்ச் வரையிலான இந்த புள்ளி விவரத்தை ஆர்பிஐ வெளியிட்டுள்ளது. அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது கடன் தொகை 5.34 சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்த பட்டியலில் வைர வணிகர் நீரவ் மோடியின் உறவினரான மெகுல் சோக்சியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனம், 5 ஆயிரத்து 693 கோடி ரூபாய் கடன் ஏய்ப்புடன் முதலிடத்திலும், ஜூன்ஜூன்வாலா சகோதரர்களின் ஆர்இஐ அக்ரோ நிறுவனம் 4403 கோடி ரூபாயுடன் இரண்டாவது இடத்திலும் இருக்கிறது.