கேரளாவில் வெள்ள நிவாரண நிதியில் முறைகேட்டில் ஈடுபட்ட 7 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
28 லட்சம் ரூபாய் வெள்ள நிவாரண நிதி பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
எர்ணாகுளம் மாவட்டத்தின் முவாட்டுபுழாவில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் இந்த குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது.
குற்றப்பத்திரிக்கையில் குற்றம் சாட்டப்பட்டவர் மாநில அரசையும் பொதுமக்களையும் ஏமாற்றியதாக குறிப்பிட்டுள்ளது.
குற்றச்சாட்டின் பேரில் சி.பி.ஐ.(எம்) கட்சியைச் சேர்ந்த அன்வர், நிதின் மற்றும் கவுலாத் உட்பட 7 பேர் மீது 1,200 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர்.