கேஸ் சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியம் விரைவில் ரத்து செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து பேசிய மத்திய அரசு அதிகாரி ஒருவர், 2022ம் ஆண்டுக்கான பெட்ரோலிய மானியத்தை 12 ஆயிரத்து 995 கோடி ரூபாயாக நிதியமைச்சகம் குறைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு வழங்கப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கையை ஒரு கோடியாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், கடந்த சில மாதங்களாக சிலிண்டர் விலை உயர்வுக்குக் இதுதான் காரணம் எனக் குறிப்பிட்டார்.
விலையை மேலும் உயர்த்தும் பட்சத்தில் சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியத்தை முற்றிலும் நிறுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.