3 வேளாண் சட்டங்கள் தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முன்வருமாறு பிரதமர் மோடி விடுத்த அழைப்பை விவசாய சங்கங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன.
இது தொடர்பாக பேசிய சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் மூத்த நிர்வாகி ஷிவ்குமார் கக்கா, அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக கூறினார்.
பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தேதி மற்றும் நேரத்தை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பேச்சுவார்த்தையை எப்போதுமே தாங்கள் மறுத்தது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். விவசாய சங்கங்களுடன், இதுவரை மத்திய அரசு 11 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ள போதிலும் தீர்வு எட்டப்படாமல் உள்ளது.