இந்தியா - அமெரிக்கா ராணுவம் இணைந்து மேற்கொள்ளும் கூட்டு போர் பயிற்சி ராஜஸ்தானின் பிகனீர் மாவட்டத்தில் துவங்கி உள்ளது. இம்மாதம் 21 ஆம் தேதி வரை இந்த பயற்சி நடைபெறுகிறது.
இரு நாடுகளின் ராணுவத்தை சேர்ந்த மொத்தம் 500 வீரர்கள் பயிற்சியில் பங்கேற்றுள்ளனர். இந்த பயிற்சியின் போது தாக்குதல் தொழில்நுட்பங்களை இருதரப்பினரும் பகிர்ந்து கொள்கின்றனர்.
இந்தியா - அமெரிக்கா இடையே ராணுவ ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், பயங்கரவாதத்தை இணைந்து எதிர் கொள்ளும் விதமாகவும் இந்த போர் பயிற்சி நடத்தப்படுகிறது.
எம்17, ருத்ரா சினுக் உள்ளிட்ட ஹெலிகாப்டர்கள் மற்றும், தாக்குதல் நடத்த பயன்படும் ராணுவ வாகனங்கள் உள்ளிட்டவையும் ஒத்திகையில் இடம்பெற்றுள்ளன.