தமிழகத்தை பின்பற்றி, சாலை விபத்து உயிரிழப்புகளை குறைக்க நெடுஞ்சாலைகளில், விபத்து ஏற்படும் இடத்திற்கு 20 நிமிடத்திற்குள் செல்லும் வகையில், 150 அதிநவீன ஆம்புலன்ஸ் வாகனங்களை வாங்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக வாங்கப்படும் ஆம்புலன்ஸ்கள் அனைத்தும் சுங்கச்சாவடிகளில் நிறுத்தப்படும் என தெரிகிறது.
தமிழகத்தில் விபத்து நடக்கும் இடத்திற்கு உலக சராசரிக்கு இணையாக 13 நிமிடத்திற்குள் ஆம்புலன்ஸ் செல்வதால் சாலை விபத்தில் உயிரிழப்பு ஏற்படுவது கணிசமாக குறைந்துள்ளது.
இதை பின்பற்றி, நாடெங்கிலும் விபத்தில் சிக்கியவர்களை விரைந்து மீட்க நவீன ஆம்புலன்ஸ்களை வாங்க மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.