ஹெச்.சி.எல். தகவல் தொழில்நுட்ப நிறுவனம் உலகம் முழுவதிலும் உள்ள தனது ஊழியர்களுக்கு 700 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு முறை சிறப்பு போனசை அறிவித்துள்ளது.
2020ம் ஆண்டில் 10 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் இலக்கை எட்டியதை அடுத்து இந்த சிறப்பு போனஸ் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 1 லட்சத்து 59 ஆயிரம் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட உள்ளது.
கொரோனா காலத்தில் அர்பணிப்பு உணர்வுடன் பணிபுரிந்த ஊழியர்கள் தங்களது சொத்து என தெரிவித்துள்ள ஹெச்.சி.எல். நிறுவனம், பிப்ரவரி மாதத்திற்குள் ஊழியர்களுக்கு போனஸ் வழக்கப்படும் எனக் கூறியுள்ளது.