பெங்களூருவில் சசிகலா ஆதரவாளர்கள் வைத்திருந்த தமிழ் பேனர்களை கிழித்து கன்னட அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சசிகலா தங்கிய சொகுசு விடுதி முன்பு அவரை வரவேற்று ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டன. இதை அறிந்து வந்த கன்னட அமைப்புகள் பல்வேறு இடங்களில் உள்ள பேனர்களை கிழித்தும், தீ இட்டுக் கொளுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னட அமைப்புகள் தமிழ் பேனர்கள் வைக்கப்பட்டதிற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து சசிகலா தங்கிய சொகுசு விடுதி அருகே போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.