உதான் திட்டத்தின் கீழ் மேலும் ஆயிரம் வழித்தடங்களில் விமானங்களை இயக்குவது குறித்து பரிசீலித்து வருவதாக விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், விமானங்களை இயக்குவது அரசின் வேலை அல்ல என்பதால் அதில் தனியார் பங்களிப்பும் தேவை என்று கூறினார்.
உதான் திட்டத்தின் கீழ் கடந்த 2017ம் ஆண்டு முதல் 311 வழித்தடங்களில் விமானங்கள் இயக்கப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.