மத்திய அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டால் அக்டோபர் 2ம் தேதி வரை தங்கள் போராட்டம் தொடரும் என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
மூன்று புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி நேற்று தேசிய நெடுஞ்சாலைகளில் சக்கா ஜாம் என்ற சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
ஹைதராபாத், பெங்களூர், மும்பை, கொல்கததா உள்பட பல்வேறு நகரங்களின் நெடுஞ்சாலைகளிலும் விவசாயிகள் மூன்று மணி நேரம் போராட்டம் நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிக்கைட், நிர்ப்பந்தத்தின் பேரில் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என்று தெரிவித்தார்.