லடாக் எல்லைகளில் இருந்து படைகளைத் திரும்பப் பெறும் விவகாரம் சிக்கலாக உள்ள போதும் சீனாவுடன் பேச்சுவார்த்தை தொடரும் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
பதற்றமான இச்சூழலை தணிக்க இருதரப்பு ராணுவ கமாண்டர்கள் மத்தியில் 9 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதும் படைகளை முழுவதுமாக விலக்க சீனா மறுத்து வருகிறது.
இந்நிலையில் விஜயவாடாவில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்சங்கர், அடுத்தச் சுற்று பேச்சுவார்த்தைக்கான சூழல் ஏதும் இதுவரை கண்ணுக்குத் தெரியவில்லை என்றார்.
படைகளைக் குறைப்பது மிகவும் சிக்கலான விவகாரம் அதனைத் தீர்க்க நமது ராணுவ கமாண்டர்கள் முயன்று வருகின்றனர் என்றும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.