விவசாயிகள் போராட்டம் குறித்து, வெளிநாட்டு பிரபலங்கள் வெளியிடும் கருத்துகளுக்கு பின்னணியில், தீய நோக்கம் போன்ற, ஏதோ ஒன்று இருப்பது அறிய முடிவதால் தான், அதில், இந்திய அரசு தலையிட வேண்டிய கட்டாயம் ஏற்படுவதாக, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருக்கிறார்.
விவசாயிகள் போராட்டம் குறித்து டுவிட்டரில், ஆவண வடிவிலான டூல் கிட் ஒன்றை சூழலியல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் வெளியிட்டு, பின்னர் சர்ச்சையானதால் அதை நீக்கினார்.
இதுதொடர்பாக பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம், இந்தியாவிற்கு எதிரான அவதூறு பிரச்சாரங்களை, தடுத்தாள வேண்டிய கடமை, பிரதான கடமையாக இருப்பதால், தாங்கள் தலையிடுவதாக தெரிவித்துள்ளார்.