உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் பேமண்ட் நிறுவனமான “பே பால்” நிறுவனம் இந்தியாவில் உள்நாட்டுப் பேமண்ட் சேவையை நிறுத்த முடிவு செய்துள்ளது.
அமெரிக்க நிறுவனமான பே பால் நிறுவனம், இந்தியாவில் தனது அலுவலகங்களை நிறுவி பல ஆண்டுகளாக டிஜிட்டல் பேமண்ட் சேவையை வழங்கி வருகிறது.
இந்த நிலையில், வருகிற ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தனது உள்நாட்டுப் பேமெண்ட் சேவைகளை முழுமையாக நிறுத்திவிட்டு, முழுநேரமாக இந்தியர்களுக்கும், இந்திய நிறுவனங்களுக்குமான வெளிநாட்டுப் பேமெண்ட் சேவைகளில் கவனத்தைச் செலுத்த உள்ளதாக பேபால் இந்திய வர்த்தகப் பிரிவு தெரிவித்துள்ளது.