செல்லப்பிராணிகள், விலங்குகளை துன்புறுத்தினால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மாநிலங்களவையில் எழுத்து பூர்வ கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளர்ச்சி துறை அமைச்சர் கிரிராஜ் சிங், விலங்குகளை துன்புறுத்தல் தொடர்பான 316 வழக்குகள் நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன என்றார்.
விலங்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவோருக்கு 50 ரூபாய் வரை அபராதம் விதிக்கவே இப்போதைய சட்டத்தில் இடம் உள்ளது என்ற அவர்,விலங்குகளை துன்புறுத்துல் தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என்றார்.
இதன்படி விலங்குகளுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டால், 75 ஆயிரம் ரூபாய் அபராதமும், 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.