தனக்கு பாரத ரத்னா விருது வழங்கக் கோரி டுவிட்டரில் செய்யும் பரப்புரையை விட்டுவிடும்படி அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்வதாக ரத்தன் டாட்டா தெரிவித்துள்ளார்.
ரத்தன் டாட்டாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் எனக் கோரி விவேக் பிந்த்ரா என்பவர் டுவிட்டரில் பதிவிட்டார்.
இதையடுத்து ரத்தன் டாட்டாவுக்கு பாரத ரத்னா என்னும் ஹேஷ்டாக் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள ரத்தன் டாட்டா, தனக்கு விருது வழங்க ஆதரவு தெரிவிப்போரின் உணர்வுகளைப் பாராட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பரப்புரையை நிறுத்திக்கொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.