கள் இறக்குவோரின் மகனாக இருப்பதில் பெருமைப்படுவதாகக் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் முதலமைச்சருக்காக அரசின் பணத்தில் ஹெலிகாப்டர் வாங்கப்பட்டுள்ளது. இதை விமர்சித்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுதாகரன், கள் இறக்கும் குடும்பத்தில் இருந்து வந்த பினராயி விஜயன் பயணிக்க ஹெலிகாப்டர் வாங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
இதற்குப் பொறுமையாகப் பதிலளித்துள்ள முதலமைச்சர் பினராயி விஜயன், கள் இறக்குவோரின் மகனாகப் பிறந்ததில் எந்தக் குற்றமும் இல்லை என்றும், தனது அண்ணன்மார் இருவர் கள்ளிறக்கும் தொழிலைச் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நீதிக்குப் புறம்பான செயல்களைச் செய்வோரின் மகனாக இருப்பதற்குத் தான் வெட்கப்பட வேண்டும் என்றும், கள்ளிறக்குவோரின் மகனாக இருப்பதில் பெருமைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.