டெல்லியில் இஸ்ரேல் தூதரம் அருகே நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் தொடர்பான என்ஐஏ விசாரணையில், இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் குழுவும் இணைந்துள்ளது.
கடந்த 29ஆம் தேதி சக்திகுறைந்த குண்டுவெடித்தது தொடர்பாக, கண்கண்ட சாட்சிகள் இல்லாத நிலையில், சிசிடிவி காட்சிகள் மூலமும் துப்பு துலங்கவில்லை. இந்த தீவிரவாதத் தாக்குதலின் பின்னணியில் சர்வதேச தொடர்புகள் இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை என்ஐஏ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட்டை (Mossad) சேர்ந்த குழு ஒன்று டெல்லி வந்த நிலையில், அந்த குழுவும் குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணையில் உதவி வருகிறது. இஸ்ரேலும் ஈரானும் எதிரிநாடுகள் என்ற வகையில், குண்டுவெடிப்பில் ஈரானை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருக்குமோ என்று சந்தேகிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.