உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் டாக்டரை கடத்திச் சென்று 20 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்து டாக்டரை மீட்டனர்.
கடத்தியவர்களின் ஒருவன் திருமணம் செய்ய பணம் தேவைப்பட்டதால் தனது கூட்டாளிகளுடன் டாக்டரை கடத்தியதாக போலீசார் தெரிவித்தனர். அவர்களால் கடத்திச் செல்லப்பட்ட டாக்டர் சைலேந்திர சிங் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.