பொருளாதார இழப்புகளைச் சமாளிக்க சரக்கு மற்றும் பயணிகள் ரயில் கட்டணங்களை உயர்த்தும்படி ரயில்வே அமைச்சகத்துக்கு நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.
இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட அறிக்கையில், மாதாந்திர பயணச் சீட்டுகள், குறைந்த கட்டணங்கள், இலவச சேவை போன்ற பல்வேறு சலுகைகளை ரயில்வே துறை பொதுமக்களுக்கு வழங்கி வருவதால் ரயில்வே துறைக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே, சூழ்நிலையை சமாளிக்க சரக்கு, பயணிகள் சேவைகளில் கட்டண நிர்ணயத்தை விவேகத்துடன் கண்டிப்புடன் மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்தக் கட்டண உயர்வை மிகுந்த கவனத்துடன் திட்டமிட்டு அமல்படுத்துவது அவசியம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.