ஜம்மு காஷ்மீரில் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, 4ஜி மொபைல் இன்டர்நெட் சேவை திரும்ப வழங்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் மத்திய அரசு ரத்து செய்தது. அதனைத் தொடர்ந்து வதந்திகள் பரவி அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க மெபைல் இன்டர் சேவையும் முடக்கப்பட்டது.
6 மாதங்களுக்குப் பின் 2 ஜி சேவையும், கடந்த ஆகஸ்ட்டில் 2 மாவட்டங்களில் மட்டும் 4ஜி சேவையும் வழங்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் மின்துறை முதன்மை செயலாளர் ரோகித் கன்சால் வெளியிட்டுள்ள தகவலில், ஜம்மு காஷ்மீர் முழுவதும் 4ஜி மொபைல் இன்டர்சேவை மீண்டும் வழங்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.