வேளாண் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார்.
மாநிலங்களவையில் பேசிய அவர், திருத்தம் மேற்கொள்ள தயார் என்பதால் சட்டங்களில் குறைபாடு உள்ளது என்பது அர்த்தம் இல்லை என்றார். ஒரு மாநிலத்தில் உள்ள விவசாயிகள் தவறாக வழிநடத்தப்படுவதாக அவர் கூறினார்.
வேளாண் சட்டங்கள் அமலுக்கு வந்தால், விவசாயிகள் நிலத்தை பறிகொடுக்க வேண்டியது வருமென சிலர் தவறான கருத்தை பரப்புவதாக கூறிய அவர், இது போன்ற ஒரு அம்சம் சட்டத்தில் இருப்பதாக யாராவது நிரூபிக்க முடியுமா என அவர் கேள்வி எழுப்பினார். விவசாயிகள் வாழ்வு மேம்பட வேண்டும் என்பதே அரசின் நோக்கமென அவர் தெரிவித்தார்.