110 கோடி முறை செலுத்தும் அளவுக்குக் கொரோனா தடுப்பு மருந்துகளைக் கொள்முதல் செய்ய சீரம் நிறுவனத்துடன் யூனிசெப் உடன்பாடு செய்து கொண்டுள்ளது.
கோவிஷீல்டு தடுப்பு மருந்தைத் தயாரிக்கவும் சந்தையில் விற்கவும் புனேயைச் சேர்ந்த சீரம் நிறுவனம் உரிமம் பெற்றுள்ளது. உலகின் மிகப்பெரிய தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனமான சீரம் இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் பல நாடுகளுக்கும் மருந்துகளை ஏற்றுமதி செய்து வருகிறது.
இந்நிலையில் ஐநாவின் உறுப்பான யூனிசெப் 110 கோடி முறை செலுத்துவதற்கான கொரோனா தடுப்பு மருந்துகளை சீரம் நிறுவனத்திடம் இருந்து நீண்டகால அடிப்படையில் வாங்குவதற்கு உடன்பாடு செய்துள்ளது.