மத்திய பட்ஜெட்டில் கொரோனா தடுப்பூசிக்காக 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தேவைப்பட்டால் மேலும் அதிகரிக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் பேசிய அவர், கொரோனா தடுப்பூசி வழங்குமாறு 22 நாடுகள் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்ததாக கூறினார். அதில் 15 நாடுகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டதாக குறிப்பிட்டார்.
56 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகள் விலையின்றி உதவி செய்யும் நோக்கத்தில் அண்டை நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஹர்ஷ்வர்தன், வர்த்தக ரீதியில் 105 லட்சம் டோஸ் மருந்துகள் சில நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.