நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் 25 உயர்நீதிமன்றங்களில் 16 உயர்நீதிமன்றங்கள் நேரடி விசாரணையை தொடங்கியுள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்து பூர்வமாக அவர் அளித்த பதிலில் குஜராத், இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், மணிப்பூர், ஒடிசா, பஞ்சாப், ஹரியானா மற்றும் சிக்கிம் ஆகிய 9 மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்கள் நேரடி விசாரணையை தொடங்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்தும் உயர்நீதிமன்றங்களிலும் காணொலி மூலமாக வழக்கு விசாரணை நடைபெற்றுவருவதாக அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது.