கடந்த டிசம்பர் மாதத்தில் நாட்டில் 5 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று பரவிய பாதிப்பு இருந்ததாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் நடத்திய ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் பத்து வயது முதல் 18 வயதுக்குட்பட்டோர் 25 சதவீதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
21 மாநிலங்களில் சுமார் 70 மாவட்டங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 21 சதவீத இந்திய மக்கள் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஐ.சி.எம்.ஆர். இயக்குனர் ஜெனரல் பலராம் பார்கவா தெரிவித்துளளார். இந்த ஆய்வில் டெல்லி சேர்க்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
கொரோனா முழுவதுமாக அழிந்து விடவில்லை என்பதால் மக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது என்றும் மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.