இலங்கை சிறையில் உள்ள 12 இந்திய மீனவர்களை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்தார்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அவர், உலகளவில் பல்வேறு நாடுகளில் 7 ஆயிரத்து 139 இந்தியர்கள் பல நாடுகளின் சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பதாக கூறினார்.
காணாமல் போன 83 இந்திய ராணுவ வீரர்கள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ளது குறித்து இதுவரை பாகிஸ்தான் உறுதிப்படுத்தவில்லை என்றும், வெளியுறவுத்துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.