தாக்குதல் நடத்த பயன்படும் விதத்தில் 90 நாட்கள் தொடர்ந்து பறக்கும் திறனுடன் அதிநவீன டிரோன், இந்திய ராணுவத்திற்காக தயாரிக்கப்படுகிறது.
பெங்களூருவை சேர்ந்த தனியார் நிறுவனமான நியுஸ்பேஸ் உடன் இணைந்து பொதுத்துறையை சேர்ந்த ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்கிறது. நேரடி வீடியோ வழங்குவதுடன் ரேடார் உள்ளிட்ட சென்சார் கருவிகளுடன், எதிரி நாடுகளின் எல்லைக்குள் சென்று இலக்குகளை கண்காணிக்கும் விதத்தில் உருவாக்கப்டுகிறது.
சூரிய சக்தியில் இயங்கும் இந்த டிரோன் இன்பினிட்டி என்று அழைக்கப்படுகிறது.
65 ஆயிரம் அடி உயரத்திற்கு மேல், 3 மாதங்கள் வரை தொடர்ந்து பறக்கும் திறனுடன் உருவாக்கப்படுகிறது. இன்னும் 3 முதல் 5 ஆண்டுகளில் இந்த டிரோன் இந்திய ராணுவத்தின் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.