மின்சார வாகனங்களுக்குச் சாலை வரியும், பதிவுக் கட்டணமும் கிடையாது என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
பெட்ரோலிய எரிபொருளால் இயங்கும் வாகனங்களுக்குப் பதில் மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவதற்கான இயக்கத்தை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், 2024ஆம் ஆண்டில் மொத்தப் புது வாகனங்களில் 25 விழுக்காடு மின்சார வாகனங்களாக இருக்கும் எனத் தெரிவித்தார்.
மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர, மூன்று சக்கர வாகனங்களுக்கு முப்பதாயிரம் ரூபாயும், நான்கு சக்கர வாகனங்களுக்கு ஒன்றரை லட்ச ரூபாயும் மானியம் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.