விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சர்ச்சைக்குரிய வகையில் டுவிட் பதிவுகளை வெளியிட்ட சுற்றுச்சூழல் ஆர்வலரான கிரேட்டா தர்ன்பர்க்கிற்கு கடும் எதிர்ப்பு உருவானதை தொடர்ந்து அந்த பதிவு நீக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 26 ஆம் தேதி டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது.
அது தொடர்பாக கிரேட்டா தர்ன்பர்க் பதிவிட்ட டுவிட்டரில், உலகம் முழுதும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடப்பதாக கூறியிருந்தார்.
சர்வதேச அளவில் இந்தியாவின் பேரை கெடுக்க நடக்கும் சதி இது என்று பலத்த எதிர்ப்பு உருவானதை தொடர்ந்து அவை காலங்கடந்த பதிவுகள் என்ற குறிப்புடன் அந்த தரவுகளை கிரேட்டா தர்ன்பர்க் நீக்கியுள்ளார்.