இமாச்சலப் பிரதேசத்தில் கடுங்குளிரும் பனிப்பொழிவும் நிலவுவதால் தரையெங்கும் பனி உறைந்து வெண்மையாகக் காட்சியளிக்கிறது.
நாட்டின் வட மாநிலங்களில் கடுங்குளிர் நிலவுகிறது. இமயமலை மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தில் இரவுநேரக் குறைந்தபட்ச வெப்பநிலை உறைநிலைக்கும் கீழாக உள்ளது.
சிம்லா, குலு, மணாலி ஆகிய பகுதிகளில் கடும் பனிப்பொழிவும் உள்ளதால் தரையெங்கும் பனிப்படலம் உறைந்து வெண்மையாகக் காட்சியளிக்கிறது.
கட்டடங்களின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி, மரங்கள் ஆகியவற்றின் மீதும் பனி உறைந்துள்ளது.