பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கியிருப்பதன் காரணமாக, விளையாட்டு அமைச்சகத்தில் நிதி பற்றாக்குறை இருக்காது என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டில் விளையாட்டு அமைச்சகத்திற்கு கடந்த ஆண்டை விட 19 சதவீதம் கூடுதலாக 1960 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கிரண் ரிஜிஜூ வெளியிட்ட அறிக்கையில், இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் தேசிய விளையாட்டு கூட்டமைப்பிற்கு கூடுதல் நிதி ஒதுக்கியிருப்பது ஊக்கமளிப்பதாக கூறியுள்ளார்.
ஒலிம்பிக் போட்டிக்கு முழு வேகத்தில் சிறந்த முறையில் தயாராகி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். வரும் ஜூலை மாதம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.