டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி, சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்க, சில புல்லுருவிகள் முயற்சிப்பதாக, இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
இதுதொடர்பாக, பன்னாட்டு பிரபலங்கள் தெரிவிக்கும் கருத்துகள், ஆதாரமற்ற, பொறுப்பற்ற சுயநலம் வாய்ந்தது என்றும் கண்டித்திருக்கிறது.
10 கோடியே 10 லட்சம் ஃபாலோயர்களை கொண்ட அமெரிக்க பாப் பாடகி ரிஹானாவின், டெல்லி போராட்டம் குறித்த டுவிட்டர் பதிவு, சர்வதேச கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இதுகுறித்து, அறிக்கை வெளியிட்டிருக்கும் வெளியுறவுத்துறை, நீண்ட நாட்களாக நடைபெறும் இந்த போராட்டத்தை, இந்தியாவின் மிக உயரிய ஜனநாயக பண்பாகவே பார்க்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.