இந்த மாத இறுதியில் இருந்து மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 16-ந் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. முதலில் சுகாதார ஊழியர்கள், முன் களப்பணியாளர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி ஊசி போடும் பணி நடைபெற்று வருகிறது.
தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள 1 கோடி தடுப்பூசி மருந்தில் இன்னும் 63 லட்சம் மருந்துகள் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. இந்த மருந்துகள் 6 மாத காலத்தில் காலாவதி ஆகிவிடும். எனவே விரைவில் மருந்துகளை பயன்படுத்தி விட வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால் இந்த மாத இறுதியில் இருந்து மக்களுக்கு தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.