கொழும்புத் துறைமுகத்தின் கிழக்குச் சரக்குப் பெட்டக முனையத் திட்டத்தை இந்தியாவின் அதானி குழுமத்துக்கு வழங்கும் முடிவை இலங்கை அரசு கைவிட்டுள்ளது.
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்குச் சரக்குப் பெட்டக முனையத்தை மேம்படுத்தும் திட்டப் பணியை இந்தியாவின் அதானி குழுமத்துக்கு வழங்கப் புரிந்துணர்வு உடன்பாடு கையொப்பம் ஆகியிருந்தது.
இந்நிலையில் இந்தப் பணியைத் தனியாருக்கு வழங்கத் துறைமுகத் தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன.
இதையடுத்துக் கிழக்குச் சரக்குப் பெட்டக முனையத் திட்டத்தைத் தனியாருக்கு வழங்கும் முடிவை இலங்கை அரசு கைவிட்டுள்ளது.
அதற்குப் பதில் மேற்குச் சரக்குப் பெட்டக முனையத் திட்டத்தை இந்தியா, ஜப்பான் நாடுகளின் ஒத்துழைப்புடன் நிறைவேற்ற இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.