மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் தங்கியுள்ள அறையில் நாய்கள் உலா வரும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நோயாளிகள் வார்டுக்குள் சர்வ சாதாரணமாக சுற்றித் திரியும் நாய்கள், சாப்பிட வைத்திருக்கும் உணவுப் பொருட்களை கவ்விச் செல்கின்றன.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், சம்மந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.