டெல்லி மக்களில் பாதிக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டு மீண்டு விட்டதாகவும், அவர்களிடம் கொரோனா ஆன்டிபாடீஸ் உருவாகி விட்டதாகவும் டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட ரத்த பரிசோதனைகளில் டெல்லி மக்களில் 56.1 சதவிகிதம் பேருக்கு ஆன்டிபாடீஸ் உருவாகியுள்ளது தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.
50 முதல் 60 சதவிகிதம் பேருக்கு ஆன்டிபாடீஸ் உருவாகி விட்டால் அது ஹெர்டு இம்யூனிட்டியை குறிப்பதுடன், நோய் தொற்று பரவல் சங்கிலி உடைந்துவிட்டது என்பதையும் காட்டுவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.