நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளை செல்போனில் பதிவு செய்வது உள்ளிட்ட வரம்பு மீறிய செயல்களில், எம்.பிக்கள் ஈடுபடக் கூடாது என, மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு அறிவுறுத்தியுள்ளார்.
மாநிலங்களவையில், தமிழக மீனவர் படுகொலை விவகாரம் தொடர்பான விவாதத்தைத் தொடர்ந்து பேசிய வெங்கய்யா நாயுடு, சில எம்.பிக்கள், தங்கள் செல்போனில், அவை நடவடிக்கைகளை, பதிவு செய்வதை காண முடிவதாக குறிப்பிட்டார்.
அண்மை நாட்களாக, இது தொடர்வதாகவும், சில எம்.பிக்கள் தாங்கள் பதிவு செய்த வீடியோக்களை, சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும், சுட்டிக்காட்டினார்.
இதுபோன்று எம்பிக்கள், வரம்பு மீறுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று எச்சரித்த வெங்கய்யா நாயுடு, நாடாளுமன்ற மாண்பிற்கு குந்தகம் விளைவிக்கின்ற செயல்களில் எம்.பிக்கள் ஈடுபடக் கூடாது என்றும் அறிவுறுத்தினார்.