முதல்கட்ட கொரோனா தடுப்பூசி போடும் பணிக்கான செலவில் 82 சதவீதத்தை ‘பி.எம்.-கேர்ஸ்’ நிதியம் ஏற்றுள்ளது.
இதுதொடர்பாக பேசிய மத்திய அரசின் செலவினங்கள் துறை செயலாளர் டி.வி.சோமநாதன் கடந்த ஜனவரி முதல் வருகிற மார்ச் மாதம் வரை, தடுப்பூசிக்கான செலவை மத்திய அரசு முழுமையாக ஏற்றுள்ளது என்றும் கூறினார்.
மத்திய சுகாதார அமைச்சகம் 480 கோடி ரூபாயும், ‘பி.எம்.-கேர்ஸ்’ 2 ஆயிரத்து 220 கோடியும் ஏற்றுக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.