டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் எல்லைகளில் அதிக அளவில் தடுப்புகள் வைக்கப்பட்டிருப்பது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் விமர்சித்திருந்த நிலையில், ஏன் காவல்துறையினர் தாக்கப்பட்ட போது யாரும் கேள்வி எழுப்பவில்லை என்று காவல் ஆணையர் ஸ்ரீவஸ்தவா வினவியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், கடந்த 26 ஆம் நடைபெற்ற டிராக்டர் பேரணியில், போலீசார் தாக்கப்பட்டதற்கும், தடுப்புகள் உடைக்கப்பட்டதற்கும் யாரும் கேள்வி எழுப்பாதது தனக்கு வியப்பை அளிப்பதாக கூறினார்.
மீண்டும் தடுப்புகள் உடையாமல் இருப்பதற்காகவே, வலிமையாக அமைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.