10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.
10 ஆம் வகுப்பு தேர்வு மே 4 ஆம் தேதி முதல் ஜூன் 4 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. காலை 10.15 மணிக்கு கேள்வி தாள் வழங்கப்படும் என்றும், 10.30 மணி முதல் விடைகளை எழுதலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மே 4 ஆம் தேதி தொடங்கி ஜூன் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை முதல் ஷிப்டாகவும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இரண்டாவது ஷிப்டாகவும் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.