வரும் 6 ம் தேதி நாடு தழுவிய அளவில் சாலை மறியல் போராட்டம் நடத்த இருப்பதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
சக்கா ஜாம் என்று இப்போராட்டத்திற்குப் பெயரிட்டுள்ள விவசாயிகள் மூன்று மணி நேரம் சாலைகளில் உள்ள தலைநகரை இணைக்கும் அனைத்துச் சாலைகளிலும் போக்குவரத்தை முடக்கப்போவதாக தெரிவித்துள்ளனர்.
இதனிடையே டெல்லி காசிபுர், சிங்கூ, திக்ரி எல்லைகளை மூடி தடுப்புகளை அமைத்துள்ள போலீசார் டிராக்டர், பேருந்து , ஜீப் போன்ற வாகனங்களில் விவசாயிகள் தலைநகரை நோக்கி வருவதைத் தடுக்க சாலைகளில் முள்கம்பிகளையும் கூரிய ஆணிகளையும் பதித்துள்ளனர்.