மேற்குவங்காளத்தில் திரிணாமுல் காங்கிரசில் இருந்து மேலும் ஒரு எம்.எல்.ஏ. ராஜினாமா செய்துள்ளார்.
அம்மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் அடுத்தடுத்து பாரதீய ஜனதா கட்சியில் ஐக்கியமாகி வருகிறார்கள்.
திரிணாமுல் காங்கிரசின் டைமண்ட் துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏ.வான தீபக் ஹல்தார் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் இதுவரை பதவி வில பாஜகவில் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.