உஜ்வாலா திட்டத்தின் கீழ் மேலும் ஒரு கோடி பயனாளிகளுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அவர், இதனை கூறினார்.
100 மாவட்டங்களில் குழாய் மூலம் சமையல் எரிவாயு விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும், ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்படும் என்றும், 2022-ம் ஆண்டுக்குள் ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகள் முழுமையாக தனியாருக்கு விற்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.