விண்வெளி திட்டங்களுக்காக புதிய நிறுவனத்தை மத்திய அரசு தொடங்க உள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில், இந்திய விண்வெளித் துறையின் கீழ் புதிய பொதுத்துறை நிறுவனமாக நியூ ஸ்பேஸ் இந்தியா துவக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக பிஎஸ்எல்வி சிஎஸ்51 செலுத்து வாகனம் உருவாக்கப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டின் டிசம்பர் மாதத்தில், ககன்யான் திட்டத்தின் கீழ் ஆளில்லா விண்வெளி ஓடம் செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.