மத்திய அரசின் பட்ஜெட்டில் வேளாண்மை உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கான கூடுதல் வரியாக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 2 ரூபாய் 50 காசுகளும், ஒரு லிட்டர் டீசலுக்கு 4 ரூபாயும் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதனால் விற்பனை விலையில் மாற்றம் இருக்காது என்பதால் நுகர்வோருக்கு பாதிப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் வரி காரணமாக ஏற்கனவே பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்பட்டு வரும் அடிப்படை கலால் வரி மற்றும் சிறப்பு கூடுதல் கலால் வரியில் அதே அளவு தொகை குறைக்கப்படுகிறது.
இந்த வரி மூலம் கிடைக்கும் 50 ஆயிரம் கோடி ரூபாய், வேளாண் பொருட்களை சேமித்து வைப்பதற்கான குளிர்பதன கிடங்குகள் உள்ளிட்ட கட்டமைப்புகளை அமைக்க பயன்படுத்தப்படும்.