சாதாரண மக்களின் மீது வரிச்சுமைகள் சுமத்தப்படும் என பலரும் எதிர்பார்த்த நிலையில், வெளிப்படைத் தன்மை வாய்ந்த பட்ஜெட்டை நிதி அமைச்சர் தாக்கல் செய்துள்ளார் என பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். இதை ஆத்மநிர்பர் பட்ஜெட் என பிரதமர் மோடி வர்ணித்துள்ளார்.
விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் திட்டத்தை நோக்கிய பட்ஜெட் என்று குறிப்பிட்டுள்ள மோடி, விவசாயிகளுக்கு இனிமேல் எளிதாக வங்கிக் கடன்கள் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இளைஞர்களுக்கான புதிய வாய்ப்புகளை அதிகப்படுத்தும் திட்டங்கள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன என பாராட்டியுள்ள அவர், உள்கட்டமைப்பு வசதிகள், தொழில்நுட்ப மேம்பாடு, புதிய சீர்திருத்தங்கள் உள்ளிட்டவற்றுக்கும் இந்த பட்ஜெட் வழிவகை செய்யும் என தெரிவித்துள்ளார்.